பிளஸ் 1 தேர்வு முடிவுகள், பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் நாளை மறுநாள் வெளியாகின்றன - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

நடைபெற்ற மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ள நாள் இணையதள முகவரிகள் குறித்த தகவல்கள் அடங்கிய செய்திக்குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது





நடைபெற்ற மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மற்றும் 27.07.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வு எழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.07.2020 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்



www.tnresults.nic.in 


www.dge1.tn.nic.in


www.dge2.tn.nic.in




பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்
சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பப்படும்.







Post a Comment

0 Comments

close