10 & 11 வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி குறித்து தகவல் தெரிவித்தல் சார்பு: PROCEEDINGS DATE 19.06.2020






பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையின்படி, 20192020 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் (புதிய பாடத்திட்டம்) மற்றும் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், தொழிற்கல்வி கணக்குப்பதிவியல் (பழைய பாடத்திட்டம்) ஆகியவற்றிற்கான பொதுத்தேர்வு இரத்து செய்யப்பட்டது.

இந்தத் தேர்வுகள் இரத்து செய்யப்பட்ட காரணத்தால் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகின்றனர். மாணவர்களின் மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும், வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதவிகித மதிப்பெண்கள் வழங்கப்படுமென அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வரசாணையின்படி மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படுவர். எனவே, இவ்விவரத்தினை தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது

Post a Comment

0 Comments

close